தமிழ் மொழி – எங்கள் அடையாளம், எங்கள் பெருமை

About us

‍ ‍ ‍Alberta Tamil Cultural and Educational Institution was established in 2009 as a small Thinnai (informal home-based) school with just four students in a house basement. In 2023, it was officially registered as a non-profit organization in the Province of Alberta. Since that year, we have been following a structured Tamil teaching methodology. Our school is now operating successfully with more than 10 teachers and approximately 100 students.

Notably, our teachers serve as dedicated volunteers, contributing their time and effort to the school. With their commitment, along with the support of parents and well-wishers, we strive to pass on the Tamil language, education, and cultural values to future generations. Every year, we also organize a cultural festival with the aim of enhancing students’ talents and leadership skills.

‍ ‍ Alberta தமிழர் பண்பாட்டுக்கல்வி நிலையமானது 2009 ஆம் ஆண்டு நான்கு மாணவர்களுடன் ஒரு இல்லத்தின் அடித்தளத்தில் திண்ணைப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு 2023 ஆம் ஆண்டு அல்பேர்ட்டா மாகாணத்தில் இலாப நோக்கமற்ற நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. அந்த ஆண்டிலிருந்து படிமுறைத்தமிழ் கற்பித்தல் முறையை பின்பற்றுகிறோம். எமது பாடசாலை 10 ற்கு மேற்பட்ட ஆசிரியர்களுடனும் ஏறக்குறைய 100 மாணவர்களுடனும் மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது. 

குறிப்பாக எமது ஆசிரியர்கள் தன்னார்வ தொண்டர்களாகவே செயற்பட்டு எமது தமிழ் பாடசாலையில் கடமையாற்றுகிறார்கள். எம் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடனும் பெற்றோர்கள், நலன் விரும்பிகளின் ஆதரவுடனும் புலம்பெயர் தேசங்களில் தமிழையும் தமிழ் கல்வியையும், தமிழ் கலாச்சார விழுமியங்களையும் எமது எதிர்கால சந்ததிக்கு கடத்திச்செல்கின்றனர்.  ஆண்டுதோறும் மாணவர்களின் திறன்களையும் தலைமைத்துவத்தையும் விருத்தி செய்யும் நோக்கில் கலை விழாவும் நடாத்துகிறோம்.

நோக்குக் கூற்று (Vission)

புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் சமூகத்தின் எதிர்கால சந்ததிக்கு தமிழ் மொழி, கலாச்சாரம், மற்றும் பண்பாட்டை உறுதிப்படுத்தி முன்னணி தமிழ் கல்வி மையமாக உயர்வது.

பணிக்குறிப்பு (Mission)

அல்பேர்ட்டா தமிழர் பண்பாட்டுக் கல்வி நிலையம், தரமான மற்றும் படிமுறைப்படுத்தப்பட்ட தமிழ் கல்வியை வழங்கி,

  • மாணவர்களின் மொழித் திறனை வளர்த்தல்

  • தமிழ் கலாச்சார விழுமியங்களைப் பேணுதல்

  • தலைமைத்துவம் மற்றும் தனிநபர் திறன்களை மேம்படுத்துதல்

  • தன்னார்வ ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆதரவுடன் கல்வி சூழலை உருவாக்குதல்

மூலம், தமிழ் மரபை அடுத்த தலைமுறைக்கு நிலைத்திருப்பதாகப் பரப்புவதாக செயல்படுகிறது.

Our Team

‍ ‍The strength of our school lies in our dedicated volunteer teachers. They generously share their time, knowledge, and experience to guide students. Committed to preserving the Tamil language and culture, they play a vital role in developing students’ academic, cultural, and leadership skills.

எமது பாடசாலையின் முதன்மை வலிமை அர்ப்பணிப்புடன் செயல்படும் எமது தன்னார்வ ஆசிரியர்களே. அவர்கள் தங்களின் நேரம், அறிவு மற்றும் அனுபவத்தை பகிர்ந்து மாணவர்களை வழிநடத்துகின்றனர். ஆசிரியர்கள் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு பேணிக் காப்பதில் உறுதியாக செயல்பட்டு, மாணவர்களின் கல்வி, கலாச்சார மற்றும் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துகின்றனர்.

  • Kindergarten to grade 8 students can register for Tamil classes here !